காரைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகக் கட்டிட திறப்பு விழா - Karaitivu.org

Breaking

Saturday, June 13, 2020

காரைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகக் கட்டிட திறப்பு விழா

காரைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான அலுவலகக் கட்டிடமானது கடந்த 2020.06.10ம் திகதி சங்கத்தின் தலைவர் திரு. யோகரெத்தினம் கோபிகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது. காரைதீவு 12ம் பிரிவு பிரதான வீதியில் அமைந்துள்ள காரைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தொகுதி புனரமைக்கப்பட்டு சங்கத்தின் செயற்பாட்டுத் தலைமையகமாக மாற்றப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனைப் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி கலாதேவி உதயராஜா அவர்களும், ஏனைய அதிதிகளாக  மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் . எம். ஜுனைதீன் அவர்களும் கல்முனை, காரைதீவு பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment