நன்றி நவிலல் - Karaitivu.org

Breaking

Wednesday, June 10, 2020

நன்றி நவிலல்


காரைதீவு அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவ நிகழ்வுகளை அம்மன் அருளால் இம்முறையும் எமது உறவுகளுக்கு வெளிக்கொணரமுடிந்தது.

உலகமெல்லாம் கொரோனா தொற்றினால் முடங்கியிருக்கும் இக்காலப்பகுதியிலும், கடல் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு முதல் குளிர்த்தி பாடுதல் வரையுள்ள நிகழ்வுகளை
  • www.karaitivu.org ஊடாக இணையச் செய்திகளாக
  • Karaitivu WebTeam Facebook கணக்கினூடாக நேரடி ஒளிபரப்பின் மூலமாக 
  • காரைதீவை FM இணைய வானொலி ஊடாக 
எமது உறவுகளுக்கு கொண்டுசென்றது மட்டுமன்றி ஆலய நிர்வாகத்தின் பணிப்பிற்கமைவாக இவ்வருடம் , 
  • பூசைகள்,  ஊர்சுற்றுக் காவியம் பாடுவதை காரைதீவின் அனைத்துப் பகுதிகளுக்கும் கேட்கும் முகமாக எமது இணையக்குழுவினர் மற்றும் தன்னார்வ அடிப்படையிலான எமது அபிமானிகளின் உதவியுடனும் ஏனைய ஆலய நிர்வாகங்களின் ஒத்துழைப்புடனும் அவ் ஆலயங்களின் ஒலிபெருக்கி ஊடாக ஒலிபரப்ப முடிந்தது.
  • உற்சவகாலத்தில் மதிய, இரவுப் பூசைகள் மற்றும் இரவு ஊர்சுற்றுக்காவியம் பாடுதல் Facebook  நேரலையூடாக ஒளிபரப்பப்பட்டது. 
10 ஆவது வருடமாக நாம் மேற்கொள்ளும், இந் நேரடி ஒளிபரப்பு செயற்பாட்டிற்கு, இவ்வருடமும் எமது இணையத்தளத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கைவைத்து எமது  பணியை சிறப்பாக மேற்கொள்ள அனுமதியளித்து, பல உதவி ஒத்தாசைகள் புரிந்த காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கௌரவ தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாக சபையினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள். 


மேலும் எமது நேரடி ஒளிபரப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள். 

எமது கிராமத்தின் இணைய நுழைவாயிலான காரைதீவு. ஓர்க், என்றும் எம் உறவுகளுக்கான பணியை எமது இணையக்குழு உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன்தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

No comments:

Post a Comment