சிட்னியில் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு சிலை ! - Karaitivu.org

Breaking

Thursday, January 2, 2020

சிட்னியில் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு சிலை !உலகில் முதல்தடவையாக இலங்கைக்கு வெளியே அவுஸ்திரேலியா சிட்னியில் அமையவிருக்கும் உலகின்முதல்தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் திருவுருவச்சிலைஅவர்பிறந்த(27.03.1892) 128வது வருட நினைவுதினமான 27.03.2020இல் திறந்துவைக்கப்படவுள்ளது.

இலங்கையைச்சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வாழும் சிட்னி உதயசூரியன் மாணவர் உதவிமையத்தலைவர்   நா.குணரெட்னம் எனும் தமிழ்பற்றாளர் இப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்.

உலகின்முதன்முதலாக வெளிநாடொன்றில் நிறுவப்பட்டுள்ள இச்சிலையை சுவாமிகள் பிறந்தகாரைதீவில்இயங்கும் காரைதீவு  சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் விபுலமாமணிவி.ரி.சகாதேவராஜா திறந்துவைக்க ஏற்பாட்டுக்குழு அழைப்புவிடுத்துள்ளது.

இச்சிலைதிறப்புவிழா தொடர்பில் விசேட மலரொன்றும் வெளியிடப்படவுள்ளது.அதற்கான ஆக்கங்களைஎதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கிடையில் Email: rsoa_sydney@hotmail.com மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிலைதிறப்புவிழாவிற்கு குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.தலைவராக கே.குலம் உபதலைவராக.கணேசநாதன் பொதுச்செயலாளராக நா.குணரெட்ணம் நிதிப்பொறுப்பாக சிட்னி உதயசூரியன்மாணவர்உதவிமையம் ஒருங்கிணைப்பாளர்களாக .பிரகதீஸ்வரர் .கணேசநாதன் சதா.நிர்மலராஜன்சோ.பாலச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழா மலர்க்குழு உறுப்பினர்களாக தி.திருநந்தகுமார்  முனைவர்மு.இளங்கோவன் .ஜெயராமசர்மாசு.ஸ்ரீஸ்கந்தராஜா வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில்ஆக்கங்களை அனுப்புவோர்  vtsaha123@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
No comments:

Post a Comment