2020 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் ! - Karaitivu.org

Breaking

Thursday, January 2, 2020

2020 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் !உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறார்கள்.இந்த எண் உங்களுக்கு சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், பயன்பாட்டில் கூடுதலான அம்சங்களைக் கொண்டுவருவதை வட்ஸ்அப் நிறுத்த வில்லை.
இந்நிலையில்,2020-ஆம் ஆண்டு முதல் பல்வேறு புதிய வசதிகளைகளை வட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது.
பேஸ்புக் நிறுவனம் வட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு புதிய வசதிகளை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை 2020-ஆம் ஆண்டு முதல் வட்ஸ் அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டுவருகிறது. அதன்படி, டார்க் மோட், பேஸ் அன்லாக், டிலிடெட் மெசெஜ் உள்ளிட்ட புதிய வசதிகள் வரவுள்ளன.
டார்க் மோட் : வட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில் சென்றால், டார்க் மோட் என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் செய்தால், கம்ப்யூட்டரில் வருவதுபோல சிஸ்டம்-வொயிடு டார்க் மோட் வரும்.
பேஸ் அன்லாக் : ஸ்மார்ட்போன்களில் செல்பி மூலம் முகத்தை படம் பிடித்து, அதன்மூலம் போனை அன்லாக் செய்து கொள்ளும் முறை.
மல்டிபுள் டிவைஸ் சப்போர்ட் : தற்போது ஒரு ஸ்மார்ட்போனில், ஒரு வாட்ஸ் அப் ஐடியை பயன்படுத்த முடியும். இந்த முறையின் மூலம் ஒரு வாட்ஸ் அப் ஐடியை ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும்.
டிலிட் மெசெஜ் : எந்த ஒரு மெசெஜையும் டெலிட் செய்த பின்னர் அதனை இந்த ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் கொண்டுவர முடியும்.
லாஸ்ட் சீன் : தற்போது அனைவருக்கும் அல்லது தங்களுக்கு மட்டும் கடைசியாக வட்ஸ் அப்பிற்கு எப்போது வந்தோம் என்பதை காணும் வசதியை செட் செய்ய முடியும். ஆனால் இந்த புதிய முறையின் மூலம் குறிப்பிட நண்பர்களுக்கு கடைசியாக வட்ஸ் அப்பிற்கு எப்போது வந்தோம் என்பதை செட் செய்யலாம். இதுபோன்ற மேலும் சில வசதிகளும் 2020ஆம் ஆண்டு முதல் வட்ஸ் அப்பில் வரவுள்ளது.

No comments:

Post a Comment