காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் இந்தியா பயணம்.! - Karaitivu.org

Breaking

Wednesday, November 6, 2019

காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் இந்தியா பயணம்.!

காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் இந்தியா பயணம்.
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழாவில் பங்கேற்பு!
 (காரைதீவு  நிருபர் சகா)

காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸண்பிள்ளை ஜெயசிறில் இந்தியா பயணமாகியுள்ளார்.
இந்தியா தமிழ்நாட்டின் பிரபல கவிஞரும்எழுத்தாளருமான உடையார் கோயில் குணா விடுத்த அழைப்பையேற்று அவர் ஒரு வாரகால பயணத்தை மேற்கொண்டு இந்தியா பயணமாகியுள்ளார்.

நேற்றுமுன்தினம் தஞ்சாவூரில் ஆரம்பமான மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழாவிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். தஞ்சாவூரை ஆண்ட இராஜஇராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை சதயவிழாவாக கொண்டாடுவது வழங்கம். அதன்பிரகாரத் தஞ்சைப்பெருங்கோவிலில் 1034வது சதயவிழா ஆரம்பமாகியது.

உலகெங்கும் திருவள்ளுவர்சிலை நிறுவும் பணியை மேற்கொண்டுவரும் தமிழகம் உடையார்கோயில் குணா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் பெப்ருவரிமாதம் திருவள்ளுவர்சிலையை நிறுவி திறந்துவைக்கவிருனக்கிறார்.

அத்தருணம் காரைதீவு பிரதேசசைபத்தவிசாளர் கே.ஜெயசிறிலின் வேண்டுகோளையேற்று காரைதீவிலும் திருவள்ளுவர்சிலை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.No comments:

Post a Comment