அம்பாறையில் 523 வாக்களிப்பு நிலையங்கள் ! - Karaitivu.org

Breaking

Friday, November 15, 2019

அம்பாறையில் 523 வாக்களிப்பு நிலையங்கள் !

ம்பாறையில் 523 வாக்களிப்பு நிலையங்களுக்கான சிற்றறைகள்வழங்கிவைப்பு!
இம்முறை இவை பிரதேசசெயலரினுடாக கிராமசேவைஅலுவலரிடம் ஒப்படைப்பு!

அம்பாறை மாவட்டத்தில் 523வாக்களிப்பு நிலையங்களில்   நடைபெறவிருக்கும் 8வது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிக்கும் சிற்றறைகள்(வாக்களிப்பதற்கான மறைவிடம்) (14) வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமசேவைஉத்தியோகத்தர்களுக்கு   பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் நேரடியாகச்சென்று வழங்கிவைத்தார்.
இங்கு கோமாரி கிராமசேவை உத்தியோகத்தருக்கு அச்சிற்றறைகள் வழங்கிவைக்கப்பட்டன.

வழமையாக இச்சிற்றறைகள் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலரிடம் முதல்நாள் வழங்கிவைக்கப்படுவது வழமை.
ஆனால் இம்முறை அவை அந்தந்த பிரதேசசெயலகத்தினூடாக பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் வழங்கிவைக்கப்படுகிறது.
அவர்கள்வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தும்போது இச்சிற்றறைகளையும் வைத்து தயார்நிலையில் வைப்பார்கள்.No comments:

Post a Comment