மூன்றரைக்கோடிருபா பெறுமதியான கண்சிகிச்சைசாதனம் அன்பளிப்பு! - Karaitivu.org

Breaking

Wednesday, October 30, 2019

மூன்றரைக்கோடிருபா பெறுமதியான கண்சிகிச்சைசாதனம் அன்பளிப்பு!

ஒன்றரைக்கோடிருபா பெறுமதியான கண்சிகிச்சைசாதனம் அன்பளிப்பு.
புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பு மார்க்பெனி நேரடிவிஜயம்!
(காரைதீவு  நிருபர் சகா)

லண்டன் புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பு  சுமார் ஒன்றரைக்கோடிருபா
பெறுமதியான கண்சத்திரசிகிச்சைக்கான நவீன சாதனமொன்றை கல்முனை
ஆதாரவைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது.

இச்சாதனத்தை கையளிக்கும்வைபவம் நேற்று கல்முனை ஆதாரவைத்தியசாலை
வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில்
வைத்தியசாலையின் மேல்தள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அவ்வமைப்பின் பிரதான வழங்குநர் மார்க் பெனி லண்டனிலிருந்து
நேரடியாகவிஜயம் செய்து அச்சாதனத்தை வழங்கிவைத்தார்.தலைவர் மார்க்பெனி
தனது மனைவி மற்றும் பிரதிநிதிகளுடன்  லண்டனிலிருந்து வந்து
கலந்துகொண்டிருந்தார்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி
டாக்டர் கே.பிரேம்ஆனந்த் அந்த நவீன சாதனத்தைக் கையேற்றுக்கொண்டார்.
புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் ஸ்தாபகரும் சர்வதேச தலைவருமான
பொறியியலாளர் கலாநிதி v..சர்வேஸ்வரன் இலங்கைக்கான தலைவர்; பொறியியலாளர்
ஹென்றி அமல்ராஜ் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவத்தில் அமைப்பின் லண்டன்
பிரதிநிதிகளும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்துசிறப்பித்தனர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற உதவிகளை கண்சத்;திரசிகிச்சை தொடர்பில் மேலும்
வழங்க தயாராகவிருப்பதாக சர்வதேச பணிப்பாளர் கலாநிதி ரி.சர்வேஸ்வரன்
தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசத்தில் இத்தகையதொரு நவீன சாதனம் வரலாற்றில்
முதற்தடவையாக இவ்வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பலனாக கரையோரப்பிரதேச மக்கள் பாரிய பயனைப்பெறவுள்ளனர். அதற்காக
அவ்வமைப்பிற்கு பலகோடி நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன் பிரதிநிதிகளுக்கு
பொன்னாடைபோர்க்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.

அவ்வமைப்பின்பிரதான வழங்குநர் மார்க் பெனி மற்றும் அவரது மனைவி இத்தகைய
உதவிகளை  வழங்குவதற்காக லண்டனில் வாரமொருதினம் 55கி.மீற்றர் தூரம்
நடைபவனியை மேற்கொண்டு பணம்சேகரித்து இத்தகைய மனிதாபிமான உதவிகளை
வழங்கிவருகிறார்.


No comments:

Post a Comment