அகத்தில் விளக்கேற்றுவதை உணர்த்தும் தீபாவளி ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

அகத்தில் விளக்கேற்றுவதை உணர்த்தும் தீபாவளி !


அகத்தில் விளக்கேற்றுவதை உணர்த்தும்  தீபாவளி

தீபாவளி  இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். 

'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றிஇ இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். தீபத்தில் பரமாத்மாவும் நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்இ பொறாமைஇ தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டுமதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது. 


நேபாளம்இலங்கை மியான்மர்சிங்கப்பூர் மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியாசிங்கையில் வாழும் இந்தியர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

வாழ்க்கையின் இருளை நீக்கிஇ ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

• இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்துஇ நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
• புராணக் கதைகளின் படி மாயோனின் இரு மனைவியருள் ஒருவரானஇ நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன். பிறந்த அசுரனின் பெயர் நரகாசுரன் ஆகும். அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். அந்நரகாசுரன் தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டிஇ கிருசுணன் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
• கிருஷ்ணர்    நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

• இராமாயண இதிகாசத்தில்இராமர் இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
• ஸ்கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
• 1577-இல் இத்தினத்தில்இ பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
• மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்துஇ இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

பிரதான கதையாக நரகாசுரன் கதையே எடுத்தியம்பப்படுகிறது. அதை சற்று பார்ப்போம்.

நரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இந்த மூவுலகமும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் விருப்பத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை இருந்தது. தேவர்கள் கூட தன் காலடியில் கிடக்க வேண்டும் என்ற நப்பாசை இருந்தது.

இந்த ஆசைகளை நிறைவேற்ற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தான் நரகாசுரன்.

இதனை பார்த்த பிரம்மன்இ தனக்காக தவம் இருந்த நரகாசுரனுக்கு அவன் கேட்கும் வரங்களை அள்ளி அள்ளி கொடுத்தார். ஒரு கெட்டவனுக்கு பதவி கிடைத்தால் எப்படியெல்லாம் பயன்படுத்துவானோ அப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டான் நரகாசுரன்.

எல்லோருக்கும் துன்பம் விளைவித்து வந்த நரகாசுரன் தேவர்களையும் முனிவர்களையும் அவன் கொடுமைப்படுத்தினான். அதுமட்டுன்றி தனக்கு வரம் கொடுத்த பிரம்மனை எதிர்த்தே போர் தொடுத்தான் நரகாசுரன்.

வரத்தை கொடுத்து விட்டு நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே என்று புலம்பினார் பிரம்மன். காக்கும் கடவுளான கிருஷ்ண பகவானிடம் தன் குறைகளை கூறி முறையிட்டார்.

இதனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக சொல்லி பார்த்தார்.

ஆனால் நரகாசுரன் கேட்பதாக இல்லை. தன் விருப்பம் போல் மக்களை கொடுமைப்படுத்தினான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ண பகவான் நரகாசுரனை போருக்கு அழைத்து தம் சக்கராயுதத்தால் அவனின் உடலை இரண்டாக பிளந்தார்.

இறக்கும் நிலையில் இருந்த நரகாசுரன் கிருஷ்ணனின் காலை பிடித்துஇ பகவானே என்னுடைய சாவு கெட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான்.

இறக்கும் நிலையில் உள்ள எனக்கு ஒரு ஆசை. அதை இப்போது தெரிவிக்கிறேன் என்று சொன்ன நரகாசுரன் கொடியவனாக நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் அல்லல் நீங்கிய நன்நாளாக மங்களகரமான நாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டினான்.

கிருஷ்ண பகவானும் அவ்வாறே அவனுக்கு அருளினார். இதனால் தான் நரகாசுரன் இறந்த நாளைத்தான் இந்துக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர் என்று ஜதீகம் கூறுகிறது.


இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும்இ அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். 

நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.

கலைச்சுடர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாகாரைதீவு  நிருபர்

Post Bottom Ad

Responsive Ads Here

Pages