இன்று ஜனாதிபதியின் 'வனரோபா' காட்டுமரங்கள் நடுகை! - Karaitivu.org

Breaking

Thursday, October 31, 2019

இன்று ஜனாதிபதியின் 'வனரோபா' காட்டுமரங்கள் நடுகை!

ஜனாதிபதியின் விசேடசெயற்றிட்டத்தின்கீழ் 'வனரோபா' காட்டுமரம் வளப்படுத்தல் திட்டம் இன்று(31) வியாழக்கிழமை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வைத்தியசாலைபொறுப்பதிகாரி மாவட்டவைத்தியஅதிகாரி டாக்டர் ஜீவா சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற காட்டுமரநடுகை நிகழ்விற்கு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தார்.

வைத்தியர்களான டாக்டர் எம்.பிரசாத் டாக்டர் வி.சாந்தினி டாக்டர் ரி. உமாசங்கர் வைத்தியசாலை அபிவிருத்திச்சபை செயலாளர் செ.இராசையா உறுப்பினர் சு.தில்லையம்பலம் சபையின்முன்னாள் உபசெயலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

டாக்டர் சுகுணன் பேசுகையில்

 'இலங்கையில்தற்போது காணப்படுகின்ற 17வீத காட்டுப்பகுதியினை 32வீதமாக உயர்த்தும் செய்ற்பாட்டின் ஓரங்கமாகவே இக்காட்டுமரங்கள் நடுகைசெய்யப்படுகிறது. இன்று இயற்கை அனர்த்தத்;திற்கு அதிக விலைகொடுக்கின்ற மாவட்டமாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்கள் இருக்கின்றன. அதற்கு பிரதான காரணம் காடழிப்பு ஆகும். இதனால் வெள்ளம் நிலமுலர்தல் மண்சரிவு வரட்சி போன்ற பலஅ னர்த்தங்களை எம்மக்கள் சந்தித்துவருகின்றனர். எனவே மரங்களை நட்டு இயற்கையின் அரவணைப்பை எமது மக்கள் பெறவேண்டும்.அதனூடாக மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.
No comments:

Post a Comment