திருக்கோவிலிலிருந்து பாதயாத்திரை புறப்படும் திகதியில் மாற்றம்! - Karaitivu.org

Breaking

Wednesday, June 12, 2019

திருக்கோவிலிலிருந்து பாதயாத்திரை புறப்படும் திகதியில் மாற்றம்!

திருக்கோவிலிலிருந்து பாதயாத்திரை புறப்படும்  திகதியில் மாற்றம்!
சிறப்பு நூல் வெளியீட்டுடன் 19இல் ஆரம்பிக்கசகலஏற்பாடுகளும் பூர்த்தி

வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக்குழு இம்முறை எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளது.
ஏலவே 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டபோதிலும் யாழ்.பக்தர்கள் திருக்கோவிலை வந்தடைவதில் இருதினங்கள் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தினால் 19ஆம் திகதி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 7மணிக்கு அங்கு பாதயாத்திரை தொடர்பான சிறப்புநூல் வெளியீடும் தொடர்ந்து விசேட சிறப்புப்பூஜையும் இடம்பெற ஆலய நிருவாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர்சு.சுரேஸ் தெரிவித்தார்.
திருப்பழுகாமத்தைச்சேர்ந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர் செல்லையா நற்குணம் எழுதிய முதல் நூலான’கதிர்காமப் பாதயாத்திரையின் சிறப்பும் கந்தப்பெருமாளின் அருளும்’ என்ற தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா இடம்பெறவிருக்கிறது. நூல் வெளியீட்டுரையை பாதாயத்திரைச்சங்க ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்துவார்.
தொடர்ந்து ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் வழியனுப்புவதற்கான விசேட சிறப்புப்பூஜையினை நடாத்துவார்.
ஆலய பரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் வண்ணக்கர்.வ.ஜெயந்தன் செயலாளர் அ.செல்வராஜா உள்ளிட்ட ஆலயநிருவாகத்தினர் பங்கேற்பர். மேலும் பிரதேசசெயலாளர்கள் பிரதேசசபைத்தவிசாளர்கள் உபதவிசாளர்கள் என பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment