சம்மாந்துறை கோரக்கோயில் அகோர​ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சபம். - Karaitivu.org

Breaking

Wednesday, June 12, 2019

சம்மாந்துறை கோரக்கோயில் அகோர​ மாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சபம்.

கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு-02இல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின் 5ம் நாள் இரவு நேர திருச்சடங்கானது அரோஹரா கோசம் முழங்க  தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா  தலைமையில் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இன்று(11,06,2019) நடைபெற்றது. இதன்போது பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில்  திருச்சடங்கு மற்றும் அம்மன் ஆலய உள் வீதியுலா வருகை என்பனவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடதக்கது
No comments:

Post a Comment