விகாரி வருட பிறப்பு ராசி பலன்கள். - Karaitivu.org

Breaking

Wednesday, April 10, 2019

விகாரி வருட பிறப்பு ராசி பலன்கள்.விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்.
வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.

மேஷம் - தை மாதப் பிறப்பு மேஷ ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. பிற்பகுதிதான் சிறப்பாக உள்ளது. முற்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். இடையூறுகள் ஏற்படும். ஆவணி மாதத்திற்குப் பிறகு (ஆகஸ்ட் 14) நிலைமை சீரடையும். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். செலவினங்கள் அதிகமாகும். உறவினர் பகை அதிகரிக்கும். பிள்ளைப்பேறு போன்றவை ஏற்படும். ஆவணிக்குப் பிறகு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். தற்போது வேலையில் இருப்பவர்கள் அதே இடத்தில் நீடிப்பது நல்லது. வேறு வேலை கிடைக்கிறது என்று இருக்கிற வேலையை விட்டு விட்டு வர வேண்டாம். அப்படி வருவதாக இருந்தால் போகிற வேலைக்கு உத்திரவாதம் பெற்றுக் கொண்டு போகவும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கும் கஷ்ட நேரம்தான். ஆனால் மாசியில் (பிப்ரவரி 24ஆம் தேதியில்) இருந்தே நல்ல நேரம் துவங்குகிறது. அதன் பிறகு வருவாய் அதிகரிக்கும். வீட்டில் குதூகலம் ஏற்படும். எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். ஆனால் தாயின் உடல்நிலை பாதிக்கும். நான்கில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்து ஏற்படலாம். அரசு காரியங்களில் சின்ன சின்ன சிக்கல்கள் குறைபாடுகளைக் கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. சொந்தப் பிரச்சினைகள் ஏற்படும். அதனை சமாளிக்கும் வகையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்டி முடிப்பார்கள், புதுமனை புகுவார்கள்.

மிதுனம் - தைப் பிறப்பு பெரிய பலமாக இருக்கும். உடனடியாக முன்னேற்றம் ஏற்படும். அதாவது பங்குனியில் (மார்ச் 6ஆம் தேதியில்) இருந்து இவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கிறது. நீண்ட நெடுங்காலமாக முடிக்க முடியாமல் இருந்த விஷயங்கள் எல்லாம் முடியும். மன மகிழ்ச்சி ஏற்படும். அக்டோபரில் இருந்து சில பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் அக்டோபரில் சனி 4ம் இடத்திற்கு மாறுவதால் தாயாரின் உடல் நிலை பாதிப்பு ஏற்படும். வாகன விபத்து, வாகன பழுது ஏற்படும். மற்றபடி மிதுன ராசிக்கு புதிய உற்சாகம், புதிய மாற்றம், புத்துணர்ச்சி கொடுக்கும் வருடமாக அமையும்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு 2வது வீட்டில் தை மாதம் பிறக்கிறது. தனஸ் ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் அவர்களுக்கு நல்ல ஆண்டாகவே இருக்கும். சித்திரையில் (ஏப்ரல் 5ஆம் தேதியில்) இருந்து நல்ல நேரம் பிறக்கும். அப்போதில் இருந்து எல்லா வெற்றிகளும் கிட்டும். குடும்பத்தில், வேலையில் சந்தோஷம் கிட்டும். நவம்பர் மாதத்தில் இருந்து இன்னும் சிறந்த நேரம் உண்டு. குழந்தை பாக்கியம், திருமணத் தடை நீங்கும்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களது ராசியிலேயே தை மாதம் பிறக்கிறது. அவர்களுக்குச் சில இடையூறுகள் ஏற்படும். அதாவது உடல் உபாதைகள்தான் ஏற்படும். அறுவை சிகிச்சை, விபத்து, உறவினர், நண்பர்கள் இழப்பு போன்றவை ஏற்படும். மிகவும் நெருக்கமாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். அதனால் அவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவது போன்றவை கூட ஏற்படும். இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். பாதிப்புகளை உண்டாக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரே பலம் என்னவென்றால், ஒரே வீட்டில் சுக்கிரன் ஏப்ரல் மாதம் வரை இருப்பதுதான். அதனால் அவர்களுக்கு பணப் புழக்கம் இருக்கும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதனை தாண்டி வருவதற்கு அது ஒன்று பலனளிக்கும். 

கன்னி - ஒரே ஸ்தானத்தில் இந்த வருடம் பிறக்கிறது. அதனால் சுபச் செலவு ஏற்படும். திருமணம், வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, அதற்காக மாதா மாதம் பணம் கட்டுவது போன்றவை. குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்பார்த்த காரியங்கள் நடப்பது, நீண்ட நாள் கனவு பலிப்பது போன்றவை ஏற்படும். அதெல்லாம் கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு பிற்பகுதி இன்னும் சிறப்பாக இருக்கும்.

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு லாபஸ்தானத்தில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறக்கிறது. எனவே துலாம் ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இருந்தாலும் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். ஏனெனில் துலாம் ராசியின் பாதக ஸ்தானம் 11ம் இடம். பாதக ஸ்தானத்தில் சந்திரன், சனி உட்கார்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிப்பு, குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, மருத்துவச் செலவு ஏற்படும். வாகன விபத்து, சகோதரப் பகை போன்றவை வந்து போகும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பிறப்பு மிகப்பெரிய பலம். அவர்களுக்கு 10ல் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறக்கிறது. எல்லா வகையிலுமே வெற்றி வாகை சூடுவார்கள். புது நண்பர்கள், விஐபிகளின் சந்திப்பு, பண வரவு, சொத்து வாங்குவது போன்றவை எல்லாமே வெற்றிகரமாக இருக்கும். இயக்கங்கள், சங்கங்கள் கலந்து கொள்வது, பதவிகள் தேடி வருவது போன்றவை ஏற்படும். இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும்.

தனுசு - 9வது வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறக்கிறது. அவர்களுக்கும் இந்த ஆண்டு மிகப்பெரிய பலம். அவர்களுக்கு கண் வலி, காது வலி போன்றவை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. இல்லையென்றால் பரஸ்பரம் பிரிந்து சென்று விடும் அளவிற்கு எல்லாம் தனுசு ராசிக் காரர்களுக்கு போகும். எனவே அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது நல்லது. பணம், வீடு, செல்வம் எல்லாம் இருக்கும், ஆனால் வீட்டில் மனைவி இல்லை என்று சொல்வது போன்ற நிலை ஏற்பட்டுவிடும். நிதானமாக செயல்படவும்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு 8வது இடத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டும் பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு நிலைமை சரியில்லை. பார்க்கபோனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் அவர்களது நிலைமை சீரடையும். எல்லாமே மோசமாகத்தான் உள்ளது. மன அழுத்தம் காரணமாக சில மகர ராசிக்காரர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் நிலை கூட ஏற்படும். காதல் தோல்வி போன்றவை ஏற்படும். அவர்கள் எதை எதிர்பார்த்தாலும் அது நிறைவேறாது.
பரிகாரம் - விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். சரபேஸ்வரர் வழிபாடு. ஒவ்வொரு சனிக்கிழமையும் சரபேஸ்வரருக்கு நெய் விளக்கேற்ற வேண்டும். கணவனுக்குத் தெரியாமல் மனைவி எதையாவது வாங்குவது, செய்வது, மனைவிக்கு தெரியாமல் கணவன் எதையாவது வாங்குவது செய்வது போன்றவை இருக்கவேக் கூடாது. இந்த ஆண்டு மட்டும் மிகவும் எச்சரிக்கையாக இருந்துவிட்டால் போதும். சரபேஸ்வரர் வழிபாடு பெரிய வெற்றிகளைக் கொடுக்கும்.

கும்பம் - ஏழாவது வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறக்கிறது. இவர்களுக்கு பாதி நல்லது, பாதி கெட்டது நடக்கும். ஆனால் எல்லாவற்றில் இருந்தும் தப்பித்து வந்து விடுவார்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் - இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் அது மீன ராசிக்காரர்களுக்குத்தான். 6வது வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். எதை எடுத்தாலும் முதல் வெற்றி என்று சொல்வது போன்று இந்த ஆண்டு அமையும்.


No comments:

Post a Comment