அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட வேக பந்துவீச்சாளர் தேர்வில் அஜித்குமார் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு.! - Karaitivu.org

Breaking

Wednesday, April 10, 2019

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட வேக பந்துவீச்சாளர் தேர்வில் அஜித்குமார் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு.!

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட வேக பந்துவீச்சாளர் தேர்வில் அஜித்குமார் சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு.!

Airtel நிறுவனத்தினால் நாடு பூராகவும் நடாத்தப்பட்டுவரும் கடின பந்து வீரர்கள் தேர்வில் கடந்த 1 மாதத்திற்கு முன் கிழக்கு  மாகாண வீரர்களுக்கு நடாத்தப்பட்ட தேர்வில் வேக பந்து வீச்சில் அகில இலங்கை தேர்வு முகாமிற்கு தகுதி பெற்ற Karaitivu Sports club  அணியை பிரதிதித்துவப்படுத்தும் சகோதரர் Ajith Kumar அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தேர்வு முகாமில் தமது திறமையை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் 115Km/h வேகத்தில் வீசி  Airtel தேசிய பயிற்சி குழாமிலும் இடம் பிடித்துள்ளார். அதிலும் இவர் தெரிவாகும் பட்சத்தில் இலங்கை தேசிய அணி வீரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

சகோதரர் Ajithkumar அவர்களை வாழ்த்துவதோடு இடம்பெறவுள்ள தேசிய தேர்விலும் உங்களது திறமையை சிறப்பாக வெளிகாட்ட எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய பிராத்திக்கிறோம்.


No comments:

Post a Comment