நன்றி நவிலல் - Karaitivu.org

Breaking

Sunday, June 3, 2018

நன்றி நவிலல்

இவ்வருடமும் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவ நிகழ்வுகளை அம்மன் அருளால் சிறப்பாக எமது உறவுகளுக்கு வெளிக்கொணரமுடிந்தது.  நிகழ்வுகளை இணையச் செய்திகளாகவும் நேரடி ஒளிபரப்பின் மூலமாகவும் இம்முறை வெளிக்கொணரமுடிந்தமையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். 

ஆலய நிர்வாகத்தின் பணிப்பிற்கமைய பக்தர்களுக்கும், சடங்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாமல் ஊடகப்பணியை மேற்கொண்டிருந்தோம். இம்முறையும் எமது இணையத்தளத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கைவைத்து ஊடகப் பணியை சிறப்பாக மேற்கொள்ள அனுமதியளித்து பல்வேறு உதவி ஒத்தாசைகள் புரிந்த காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கௌரவ தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாக சபையினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள். மேலும் எமது நேரடி ஒளிபரப்பிற்குப் பல்வேறுவழிகளிலும் உதவிய ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் திரு. அ.சசிகரன் அவர்களுக்கும் எமது விசேட நன்றிகள்.

பல்வேறு வழிகளிலும் எம்முடன் புரிந்துணர்வுடன் செயற்பட்ட காரைதீவுநீயூஸ் இணையத்தளத்திற்கும் எமது நன்றிகள் மேலும் எமது நேரடி ஒளிபரப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகளுக்கும் எமது நன்றிகள். 

No comments:

Post a Comment