சிறப்பாக இடம்பெற்ற KSC இன் தீபாவளி பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி !!! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 12 நவம்பர், 2023

சிறப்பாக இடம்பெற்ற KSC இன் தீபாவளி பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி !!!

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தீபாவளி தினத்தை சிறப்பிக்கும் வகையில் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்த சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் கழகத்தலைவர் திரு . T.தவக்குமார் (தலைவர் -KSC &vcc) (தொழில்நுட்ப உத்தியோகத்தர், வலயக்கல்வி பணிமனை பட்டிருப்பு)  தலைமையில் 11.11.2023 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி பூப்பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Eng.A.லிங்கேஸ்வரன் (நிறைவேற்றுப் பொறியியலாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மட்டக்களப்பு) அவர்களும், கௌரவ அதிதிகளாக (கௌரவ போசகர்கள் KSC & VCC) திரு.S.ஜெகராஜன் (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைதீவு), திரு.V இராஜேந்திரன் (உத்தரவு பெற்ற நிலஅளவையாளர்), திரு.V.T.சகாதேவராஜா (உதவிக் கல்விப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


மேலும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் கனிஷ்ட உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.


வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post Bottom Ad

Responsive Ads Here

Pages