காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் எமது பாடசாலையில் வெகு விமர்சியாக கல்லூரியின் முதல்வர் திரு.ஆர்.ரகுபதி சேர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவிற்கு பாடசாலையின் பிரதி அதிபர் Mr.S.Raveendran சேர் தலைமை வகித்தார்.
பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் சாய்ந்தமருது கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய Mr.M.N.Maleek சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு அதிதியாக காரைதீவு கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் Mr.J.David சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
விசேட அதிதிகளாக எமது பாடசாலையின் EPSI இணைப்பாளரும் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகருமான Mr.T.Sivanathan சேர் அவர்களும் அவருடன் இணைந்து எமது பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் Mr.V.Vijayarakunathan சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது அதிதிகள் வரவேற்பு, இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல், பாடசாலைக்கீதம், ஆசிரியர் கீதம், வரவேற்புரை, அதிதிகள் உரை, ஆசிரியர்களின் நிகழ்வுகள், மாணவிகளுக்கான நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான நினைவுப்பரிசில்கள் வழங்கல் மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
கல்லூரியின் உப முதல்வர் திரு.த.ரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என சகலரும் கலந்து கொண்டனர்.

















