மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா பஸீர் தலைமையில், சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் 45 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வீடுகள் தோறும் சென்று சோதனையிட்டனர்.
இப் பகுதிகளில் 304 இடங்கள் டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதோடு, 5 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.


