விவேகானந்தா விளையாட்டு கழகம் T10 கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ஆரம்பம் ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

விவேகானந்தா விளையாட்டு கழகம் T10 கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டி ஆரம்பம் !

விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 36 வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக அமரத்துவம் அடைந்த கழகத்தின் போசகர் திரு எஸ் பேரின்பம் ஐயா அவர்களின் ஞாபகார்த்த T10 கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டியானது அவரது மகன் பேரின்பம் வர்ணோதையன் அவர்களின்  அனுசரணையுடன் நேற்றைய தினம் 2023/01/20 ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அவரது மனைவி தாதிய மேற்பார்வையை உத்தியோகத்தர் திருமதி பேரின்பம் சாரதாதேவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 நிகழ்வுகளின் முதற்கட்டமாக மங்கள விளக்கேற்றல் அதனைத்தொடர்ந்து கழக கீதம் இசைக்கப்பட்டு மறைந்த கழகத்தின் போசகர் திரு S . பேரின்பம் ஐயா அவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றதோடு சுற்று போட்டியின் முதலாவது  போட்டியானது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து நிந்தவூர் வுழு மவுண்டன் விளையாட்டு கழகம் மோதிக்கொண்டது போட்டியினை இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியான தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் திருமதி பேரின்பம் சாரதாதேவி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு இறுதியில் வெற்றி பெற்ற அணியின் ஆட்டநாயகன் விருதினை பிரதம அதிதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டு நிகழ்வின் இறுதியாக கழகத்தின் செயலாளர் K . உமாரமணன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages