தைப்பொங்கல் சிறப்பு கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தைப்பொங்கல் சிறப்பு கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் !

காரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஏற்பாடு செய்து நடாத்திய போட்டிகள் இம்மாதம் 13,14,15ம் திகதிகளில் காரைதீவு கடற்கரை பூங்கா அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்றன.
கழக தலைவர் திரு.ரி.தவக்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள்  போட்டிகள் வெகு சிறப்பாக இடம்பெற்றதுடன் அதிதியாக  கழகப் போசகர் உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் கலந்து சிறப்பித்து கிண்ணங்களையும் வழங்கி வைத்துடன் கழகத்தின் சிரேஷ்ட கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages