விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 2023 ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 2 ஜனவரி, 2023

விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 2023 ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு !

 விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 2023 ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வாக கழகத்தின் உறுதியுரை எடுக்கின்ற நிகழ்வு நேற்றைய தினம் கழக தலைமைக் காரியாலயத்தில் கெளரவ தலைவர் திரு லயன் S . நேசராசா தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலாச்சார உத்தியோகத்தரும் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான K . ஜெயராஜி அவர்கள் கலந்து கொண்டார் இந்நிகழ்வின் போது உறுதி உரை எடுக்கின்ற நிகழ்வில் கழக அங்கத்துவர்கள் உறுதி உரை எடுக்கப்பட்டு அத்துடன் 2023 ம் ஆண்டுக்கான வீரர்களுக்கான சீருடையானது  பிரதம அதிதி  K . ஜெயராஜ் மற்றும் கெளரவ தலைவர் திரு லயன்  S . நேசராசா அவர்களினாலும் அறிமுகம் செய்யப்பட்டது அத்துடன் இந்நிகழ்வின் உரையாற்றிய பிரதம அதிதி K . ஜெயராஜ் அவர்கள் காரைதீவில் ஒரு மனிதன் பூரணமாக  இயங்குவதற்காக அனைத்து துறைகளையும் கொண்டு இயங்கும் ஒரே கழகம் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் அந்த வகையில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து பல நல்ல அறிவுரைகளையும் தெரிவித்தார் இறுதியாக அனைவருக்கும் பாற்சோறு அளிக்கப்பட்டு கழகத்தின் செயலாளர் K . உமாரமணன் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

News- VSC FB









Post Bottom Ad

Responsive Ads Here

Pages