வாணி அறநெறிப் பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

புதன், 11 மே, 2022

வாணி அறநெறிப் பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு !

இந்து கலாசார சமய அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவன அனுசரணையில் மத்திய முகாம் நான்காம் கிராமம் வாணி அறநெறிப் பாடசாலை கட்டிட திறப்பு விழா இடம்பெற்றது .

கட்டிட திறப்பு விழா முன்னதாக கலாசார ஊர்வலம் சகிதம் இடம்பெற்று சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை இடம்பெற்றது.

பின்னர் வாணி அறநெறிப் பாடசாலை பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.ஆன்மீக அதிதி தேவகுமார் குருக்கள் முன்னிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டார் .

கௌரவ அதிதிகளாக சிவனருள் பவுண்டேஷன் அம்பாரை மாவட்ட தலைவி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகா தேவராஜா செயலாளர் கே வாமதேவன் பொருளாளர் ஜனார்த்தனன் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யோகேஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

அறநெறி பாடசாலை கட்டிடம் மற்றும் தளவாடங்கள் 4 லட்சம் ரூபாய் செலவில் சிவனருள் பவுண்டேஷன் அமைத்துக் கொடுத்தது மாத்திரமல்லாமல்  அவை அதிதிகளால் கையளிக்கப்பட்டன.மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.இறுதியில் அன்னதான மும் இடம்பெற்றது.

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages