நாளை ஊரடங்கு தற்காலிக தளர்வு - Karaitivu.org

Breaking

Wednesday, April 15, 2020

நாளை ஊரடங்கு தற்காலிக தளர்வுஇலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டமானது அதிக தொற்று அபாயமுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பகா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (2020.04.16) முற்பகல் 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினமே பிற்பகல் 04.00 மீண்டும் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மீண்டும் ஊரங்குச் சட்டமானது 2020.04.20ம் திகதி முற்பகல் 06.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது. 

பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்ப்பதுடன் பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணவும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment