கிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் "இல்லறச் சிறையிலே" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு! - Karaitivu.org

Breaking

Tuesday, April 28, 2020

கிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் "இல்லறச் சிறையிலே" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு!

கிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் "இல்லறச் சிறையிலே" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு.

உலகை உலுக்கும் கொரோனா பற்றி  விழிப்புணர்வு பாடல்கள் பல உலகலாவிய ரீதியில் அவரவர் பாணியில் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் கிழக்கு மண்ணின் பாரம்பரிய கலை வடிவங்களை உள்ளடக்கி மக்களை விழிப்படைய செய்யும் முயற்சியில் கிழக்கின் இளம் படைப்பாளர்கள் கைகோர்த்துள்ளனர்.

அந்த வகையில் பாடலாசிரியர் காரையன் கதனின் தமிழோடு கலை பேசும் வரிகளுக்கு தில்லை மண்டூர் இசை கலைஞன் டினேஸ் திரு சந்தனா இசை வழங்கி தன் குரலால் வலுச்சேர்க்க எம்.ஆர்.வர்ணன் அழகிய கலை வடிவங்களை ஒளிப்பதிவு செய்ய
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த வளங்களை கொண்டு
"இல்லறச் சிறையில்" பாடலை உருவாக்கியுள்ளனர்.

இப்பாடல் காணொளியில் பாரம்பரிய கலை வடிவ கலைஞர் குணசேகரம் சுரேஸ்குமார்
மற்றும் தேவகுமார் பிரணிதா ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கிழக்கின் கலை வடிவங்களை காட்சியாகத் தந்துள்ளனர்


"இல்லறச்சிறையில்"

வரிகள் - காரையன் கதன்
இசை மற்றும் குரல் - டினேஸ் திரு சந்தனா(DTS)
ஒளிப்பதிவு -எம்.ஆர்.வர்ணன்
பக்கக்குரல் - செல்வா
இசைக்கலவை - எஸ்.ரீ (ST)
பாரம்பரிய கலைஞர் -குணசேகரம் சுரேஸ்குமார்
பரதம் - தேவகுமார் பிரணிதா

பாடலை பார்வையிட இங்கே அழுத்தவும்


No comments:

Post a Comment