காரைதீவில் ஓவியங்களினூடாக புராணக்கதைகள் செயலமர்வு! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 11 டிசம்பர், 2019

காரைதீவில் ஓவியங்களினூடாக புராணக்கதைகள் செயலமர்வு!

காரைதீவில் ஓவியங்களினூடாக புராணக்கதைகள் செயலமர்வு!
உலக ஓவியர்இந்திய மு.பத்மவாசன் அறநெறி மாணவர்க்கு பயிற்சி.
காரைதீவு  நிருபர் சகா


அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களின் மனப்பாங்கினை விருத்தி செய்யும் நோக்குடன் 'ஓவியங்களின் ஊடாக புராணக்கதை' எனும் தொனிப்பொருளில் அமைந்த ஓவிய பயிற்சி பட்டறை காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  அ. உமாமகேஷ்வரன்  தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் போது சுவாமி விபுலானந்தர் பிறந்த வீட்டில் பூசை இடம்பெற்று சுவாமி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சுவாமிஜி அவர்களின் இல்லத்தில் வெள்ளைநிற மல்லிகை கன்றுகள் அதிதிகளின் பொற்கரங்களால் நடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீசன்  அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வுக்கு வளவாளராக இந்தியாவின் தமிழ்நாட்டிருந்து வருகை தந்திருக்கும் பிரபல புகழ்பெற்ற ஓவியர் சிவஸ்ரீ மு. பத்மவாசன்  கலந்துகொண்டு பயிற்சியினை நடாத்திச்சென்றார்கள்.

இந்நிகழ்வு மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான  கே. ஜெயராஜ் மற்றும் கே.பிரதாப் ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தசை;செர்ந்த 120அறநெறி மாணவர்களும் 30 ஆசிரியர்களும் கலந்து பயன்பெற்றனர்.










Post Bottom Ad

Responsive Ads Here

Pages