கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள 'வட்ஸ்அப்' பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம் முதலிடம்! - Karaitivu.org

Breaking

Wednesday, December 4, 2019

கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள 'வட்ஸ்அப்' பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம் முதலிடம்!கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள 'வட்ஸ்அப்' பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம்  முதலிடம்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர்களுடனான மாகாண கல்விப்பணிப்பாளரின் 'வட்ஸ்அப்' குழும பதிலளிப்பில் சம்மாந்துறை வலயம்முதலிடம் பெற்றுள்ளது.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 121 தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் அதற்கு உடனடியாக பதிலளித்த வலயக்கல்விப்பணிப்பாளர் வரிசையில் அதிகூடிய 102 தகவல்களுக்கு பதிலளித்த சம்மாந்துறை வலயம் முதலிடம் பெற்றுள்ளது.


அதற்காக மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


இரண்டாமிடத்தில் 90தகவல்களுக்கு பதிலளித்து கல்முனை வலயமும்  மூன்றாமிடத்தில் 85தகவல்களுக்குப் பதிலளித்து திருக்கோவில் வலயமும் திகழ்கின்றன.

76தகவல்களுக்கு பதிலளித்த கல்குடா மற்றும் மட்டு.மத்தி வலயமும் நான்காம் இடத்தைப்பெற 74க்கு பதிலளித்து மட்டு.மேற்கு வலயம் 6ஆம் இடத்தைப்பெற்றது.
ஏனைய வலயங்கள் அடுத்தடுத்த கட்டங்களில் பெற ஆகக்குறைந்த பதிலளிப்பினை அதாவது ஆக 15 ற்குப் பதிலளித்த திருகோணமலை வலயம் இறுதி ஸ்தானத்தில் அதாவது 17வது ஸ்தானத்தில் உள்ளது.
இதனை கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள புள்ளிவிபர தரவுப்பதிவேடு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment