நன்றி நவிலல்...! - Karaitivu.org

Breaking

Friday, November 15, 2019

நன்றி நவிலல்...!

"காரைதீவிலிருந்து உலகமெங்கும் வாழும் காரைதீவு மக்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் இணைக்கும் ஒரு சமூகவலையமைப்பாக/இணையத்தள karitivu.org விளங்குகின்றது. தன்னலம் கருதாது தாம் பிறந்த மண்வாசனையுடன் தமிழ்மணமும் காரைதீவின் அன்றாட நிகழ்வுகளையும் தவறாது  தெளிவு படுத்தும்  சேவை வழங்கப்படுகின்றது.

எவ்வித எதிர்பார்ப்பகளுமின்றி நமது உறவுகள் அறிந்து கொள்ள பணியாற்றும் அவர்களை நாம் இன்னமும் கண்டகொள்ளாமல் இருப்பது வேதனைதான். இருந்தும் ஒருசிலபுலம்பெயர் உறவுகள் இவாகளுக்கு ஆதரவாகவும் அன்பளிப்புகளையும் வழங்கி வருகின்றனர். 

கடந்த காலங்களில் பல இடர்பாடுகளின் மத்தியில் தமது சேவையினை வழங்கும்  karitivu.org இணையத்தள உறுப்பினர்களுக்காக கனடாவிலிருந்து திருமதி.சிவஜோதி இளங்கோ சிவநாதபிள்ளை அவர்கள் தனது பங்களிப்பினை வழங்கியமை பாராட்டிற்குரியது.

கனடாவிலுள்ள திரு.ஜெகா கணபதிப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க karitivu.org இணையத்தள கனடா இணைப்பாளர் திரு. ஜெ.உஷhகாந் அவர்களால் அமரர் சிவநாதபிள்ளை அவர்களின் மரணச்சடங்கு இறுதிக்கிரிகைகளை நேரடி ஒளிபரப்பியதால் அவரது உறவினர்கள் பலர் நேரடியாக அதனைப்பார்க்க கூடிய வாய்ப்பாக அமைந்தது..

அதனால் மனம்மகிழ்ந்த அதன்வளர்ச்சிக்காக திருமதி.இளங்கோ சிவஜோதி இணையத்தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

இப்படியான உதவிகள் மூலம் எமது ஊரிலிருந்த ஒளிபரப்பாகும் karitivu.org இணையம் மேலும் சிறப்புற்று விரைவாக தடங்கலின்றி தகவல்களை தரக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை."

உங்களது karaitivu.org க்கான இந்த உதவியானது, எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும், எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.

No comments:

Post a Comment