காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்புதின நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Thursday, October 17, 2019

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்புதின நிகழ்வுகள் !


சர்வதேச வெள்ளைப்பிரம்புதினத்தையொட்டி காரைதீவு பிரதேச சபை செவ்வாய்க்கிழமை(15) காலை சர்வதேச வெள்ளைப்பிரம்புதின நிகழ்வை காரைதீவில் நடாத்தியது.

முன்னதாக பிரதேசசபை முன்றலிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் பிரதானவீதி  மற்றும் திருமால்முகவீதியூடாக விபுலாநந்த கலாசார மண்டபத்தை வந்தடைந்தது..
அதன்போது மாணவர்கள் பொதுமக்கள் அதிதிகள் விழிப்புலனற்றோர் என பலதரப்பட்டரும் கலந்துகொண்டனர்.

பின்னர் மண்டபத்தில் பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர் முத்துலிங்கம் காண்டீபன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆன்மீகஅதிதி சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

பிரதமஅதிதியாக கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவஅதிதிகளாக காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கல்முனை ஆதாரவைத்தியசாலை பிரதி வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் சா.இராஜேந்திரன் காரைதீவு பிரதேசசைவத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஜீவா சிவசுப்பிரமணியம் சம்மாந்துறை பொலிஸ்நிலையபோக்குவரத்து பொறுப்பதிகாரி பி.ரி.நசீர்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

நட்சத்திரஅதிதிகளாக ஜனாதிபதி விருதுஊடகசான்றிதழ் பெற்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா இளம்சாதனையாளர் சோ.வினோஜ்குமார் ஆகியோர் பொன்னாடைபோர்த்தப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

மட்டு. உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தலைவர் எஸ்.கிருஸ்ணகுமார் சிறப்புரையாற்றினார். ஏனைய உறுப்பினர்கள் பாடல்களை அருமையாகப்பாடி சபையோரை வெகுவாகக்கவர்ந்தனர்.

பிரதேசசபை உறுப்பினர்களான திருமதி சின்னையா ஜெயராணி மு.காண்டீபன் த.மோகனதாஸ் இ.மோகன் ச.நேசராசா எம்.ஜலீல் எம்.றனீஸ் ஆகியோரும் நல்லிணக்ககுழு உறுப்பினர் வெ.ஜெயநாதனும் கலந்துசிறப்பித்தனர்.

மேலும் பல விசேடஅதிதிகள் ஆன்மீகஅதிதிகளும் கலந்துசிறப்பித்தனர்.
நிகழ்வில் மட்டு. உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் 75பேர் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். அவர்களுக்கு பரிசுகளை அன்பளிப்புகளை பலரும் வழங்கினர்.

நிகழ்ச்சிகளை ஊடகவியலாளர்களான வி.ரி.சகாதேவராஜா எம்.எம்.சமீம் ஆகியோர் தொகுத்துவழங்கினர்.

No comments:

Post a Comment