இலங்கை தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் திறமைக்கானதேடல் விருதுவிழாவும் கலைவிழாவும். - Karaitivu.org

Breaking

Thursday, October 17, 2019

இலங்கை தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் திறமைக்கானதேடல் விருதுவிழாவும் கலைவிழாவும்.


இலங்கை தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் ஆதரவுடன் லக்ஸ்டோ மீடியா மற்றும் ஆர்கே மீடியா நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் திறமைக்கானதேடல் விருதுவிழாவும் கலைவிழாவும் 12 சனிக்கிழமை சம்மாந்துறை நகரமண்டபத்தில் நடைபெற்றது.

சிரேஸ்ட ஒலிபரப்பாளர் பஷீர்அப்துல்கையூம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.முஹமட்முஸ்தபா சம்மாந்துறை பிரதேசசபையின் எதிர்க்கட்சித்தலைவர் எம்.ஜ.மாஹிர் கல்முனை ஜ.தே.கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி றசாக்; சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோருட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

லக்ஸ்டோ மீடியா பணிப்பாளர் கலைஞர் எ.அன்சார் மற்றும் ஆர்கே மீடியா நிறுவனத்தலைவர் ராஜகவி ராஹில் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். இடையிடையே கலைநிகழ்ச்சிகள் சாகசநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திறமைக்கான தேடல்விருதுகள் அதிதிகள் உள்ளிட்ட சுமார் நூறுபேருக்கு வழங்கப்பட்டது.
No comments:

Post a Comment