இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கலைகளின் சங்கமம் நிகழ்வு 27 சனிக்கிழமை காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஹேமலோகினி குமரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு.வே.ஜெகதீஸன் (மேலதிக அரசாங்க அதிபர் – அம்பாறை ) மற்றும் சிறப்பு அதிதிகளாக எஸ். ஜெகராஜன் ( பிரதேச செயலாளர் – காரைதீவு ), கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ர விரிவுரையாளர் சிவரெத்தினம் மற்றும் கிழக்கு பல்கலைகழக நுண்கலைதுறை தலைவர் எஸ். இன்பமோகன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். 
இன் நிகழ்வின் போது  கிராமிய நடனம், உடுக்கிசை ,நாட்டுக்கூத்து , கொம்புமுறிபாடல், இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. 
 
 


































 
 
 
 
 
 
 இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்