காரைதீவு சமூக சேவை உறவுகள் வழங்கிய, மட்டக்களப்பு பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான்(நாககட்டு) ஆலய புகழ் கூறும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீட்டுவிழாவும், கௌரவிப்பு நிகழ்வும் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 7 ஜூலை, 2019

காரைதீவு சமூக சேவை உறவுகள் வழங்கிய, மட்டக்களப்பு பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான்(நாககட்டு) ஆலய புகழ் கூறும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீட்டுவிழாவும், கௌரவிப்பு நிகழ்வும்



ஓம் சக்தி.. ஓம் நாகசக்தி..

மட்டக்களப்பு பண்டாரியாவெளி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான்(நாககட்டு) ஆலய புகழ் கூறும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீட்டுவிழா நேற்று(05/07/2019) இடம்பெற்றது.

வெற்று இடை கானகத்தில் அமர்ந்திருக்கும் அன்னையின் சந்நிதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் அப்பிரதேச மக்களாலும் , ஆலய நிர்வாகத்தினாலும்,  இந்து கலாச்சார  அலுவலகராலும் மற்றும்  காரைதீவு மக்களாலும், இப்படைப்பினை உருவாக்க உழைத்த   காரைதீவு  சமூக சேவையாளர்களையும் , கலைஞர்களையும்  பாராட்டும் முகமாக  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.அதன் ஒரு அங்கமாக   திரு.சண்முகநாதன் அருள்நாதன் குடும்பத்தினர், திரு.இராசையா அசோக் மற்றும் திரு.இராஜேந்திரதாஸ் இராஜமோகன் ஆகியோர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அம்பாரை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகஸ்தர் திரு.ஜெயராஜ் உரையாற்றுகையில் இந்த செயற்பாடு அனைத்து  மக்களாலும் வரவேற்று போற்றப்படவேண்டியதொன்றாகும், அத்தோடு அனைத்து தமிழ் மக்களும் இந்த சமூக சேவையினையும் கலை வெளியீட்டினையும் பாராட்ட வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர் என்று கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் கலைஞர் திரு.இரா.இராஐமோகன் உரையாற்றுகையில் தனது எண்ணமே இசை, கவி, பாடலாக்கம், இது என் வாழ்வின் மூச்சு அத்துடன்  அம்மன் தாய்க்கு தொண்டு செய்வதே என் பணி என்று  மனம் திறந்து உரையாற்றினார். அதுமட்டுமன்றி  தான் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக 5 பாடல் இறுவட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டிருகிறேன். ஆனால்  கடந்த 3 வருடங்களாக எந்தவொரு வாய்ப்பும் அற்றிருந்த போது, மீண்டும் அன்னையருளால் இப்படியானதொரு  சிறந்த வாய்ப்பு கிடைத்தமையையிட்டு மனம்மலர்ந்து இன்புறுவதாகவும் அன்னையது அருளும் ஆசிர்வாதமும்  தன்னை நாடிவந்ததாகவும் மனமுருகி கூறியிருந்தார்.

இப் பாமாலை இறுவட்டினை ஒழுங்குசெய்த சமூக சேவையாளரும் கலைஞருமாகிய திரு.இ.அசோக் உரையாற்றுகையில்,
 இறைதொண்டு செய்ய கிடைப்பது ஒரு வரம் எனவும், நாககட்டு அம்மன் பாடல்களை உருவாக்குவது பற்றிய எண்ணக்கருவினை , சமூகசேவையாளர் அருள்நாதன் அவர்கள்   தொலைபேசியூடாக சில மாதங்களின் முன் தன்னிடம் கலந்தாலோசித்திருந்தார். அது  தற்போது செயல்வடிவம் கொடுத்து நிற்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும், தங்களது சேவைகள் தொடர்ந்தும் எமது சமூகத்திற்காக இடம்பெறும் எனவும், தான் தொச்சியாக 2007ம் ஆண்டுமுதல் கடந்த 12 வருடங்களாக சமூக சேவையினை ஆற்றிக்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார் . 

மேலும் அவர் தொடர்ந்து  கருத்துதெரிவிக்கையில், மேலைத்தேய நாடுகளில் இருந்தாலும் கூட  எமது கலை, கலாச்சாரங்களை பேணியும் காப்பாற்றியும் ஊக்குவித்தும்  வருகின்ற பல  கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள், அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்த வேண்டிய கடைப்பாடு எம்மிடம் இருக்கின்றது. அந்தவகையிலேயே லண்டனில் வசிக்கும் இசைக்கலைஞர், பாடகி செல்வி.அபிநயா மதனராஜா அவர்கள் தனது குரலினை அம்மனை வேண்டி பாடுவதற்கு ஒழுங்கமைத்து கொடுத்ததாகவும், அந்த பாடல் பலராலும் பாராட்டப்பட்டுக்கொண்டு வருகின்றதாகவும், அபிநஜா அவர்களது தாய் தந்தையர் சிறந்த வழிநடத்திகளாக இருக்கின்றதாகவும், இது போன்ற மேலைத்தேய நாடுகளிலே வாழுகின்ற பெற்றோர்களை எண்ணி தமிழர்களாகிய நாங்கள் பெருமையடைகின்றோம் எனவும் கூறினார்.
   
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இசைக்கலைஞர் திரு.இரா. இராஜமோகன் காரைதீவின் ஒரு சிறந்த இசைக்கலைஞர், அவரது திறமைகள் மென்மேலும் வெளிக்கொண்டுவரப்படவும் பாராட்டப்படவும் வேண்டியது , அவர்போன்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தி, எம்மண்ணை இன்னும் சிறப்புற செய்ய  வேண்டும் எனக்கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பண்டாரியாவெளியின் தங்களது இணைப்புக்குழு செயற்பாட்டாளரான சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவன் திரு.கேதீஸ்வரன் மிகவும்  பாராட்டப்ப வேண்டியவர் எனவும், மேலும் Maxxa வீடியோ குழுவிற்கும்,  தங்கள் கலைக்குழுவின் சமூகசேவையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு, இசையமைப்பாளர் திரு.செந்தூரன் ஒரு சிறந்த இசைக்குடும்த்திலிருந்து வந்த ஒருவர், பல திறமைகளை தன்னுள்ளே ஒளித்துவைத்திருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், முக்கியமாக தயாரிப்பாளர் திரு.ச.அருள்நாதன் அவர்கள் இச்செயற்பாட்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை நிதி மட்டுமல்லாது, ஒவ்வொரு விடயங்களிலும் அயராது உளைத்தவர், ஒவ்வொரு செயல்வடிவங்களை  அமைக்கின்றபோதும் தன்னுடன் நேரம்காலம் பார்க்காது கலந்துரையாடி முடிவுகள் எடுப்பதற்கு ஒரு முதுகெலும்பாக செயற்பட்டவர், அவரது சேவைகள் விலைப்பெறுமதி அற்றவை,  அவரது தூய எண்ணங்களை மெச்சுவதாகவும், இறைஆசிகளும் அன்னையின் அருளும் அவருக்கும் அவர்களது குடும்பத்திற்கும் அதேபோன்று இந்த சமூகசேவை எண்ணம்கொண்ட தங்களது கலைக்குழுவினர் அனைவருக்கும் கிடைக்க அன்னையின் பாதங்களை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவ் ஆலய தர்மகர்தா, தலைவர் மற்றும் அப்பிரதேச மக்கள் உரையாற்றுகையில், மிகவும் பிரசித்தி வாய்ந்த  தங்கள் ஆலய மகிமை கூறும் பாடல்களை மிகச்சிறந்த முறையில் வழங்கியது மட்டுமல்லாது, சமூக சேவை எண்ணம் கொண்ட இந்த செயற்பாட்டினை வழங்கிய இந்த காரைதீவு சமூகசேவை குழுவுக்கும், இதில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் அத்துடன் காரைதீவு மக்களுக்கும், தங்களது நன்றிகளை தெரிவிப்பதாக  கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.






























Post Bottom Ad

Responsive Ads Here

Pages