உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் தொடர்பான முன்னோடிக்கூட்டம் எதிர்வரும் 28 - Karaitivu.org

Breaking

Monday, May 27, 2019

உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் தொடர்பான முன்னோடிக்கூட்டம் எதிர்வரும் 28


உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் தொடர்பான முன்னோடிக்கூட்டம் எதிர்வரும் 28


வரலாற்றுப்பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் தொடர்பாக அரசாங்க அதிபரால் கூட்டப்படும் முன்னோடிக்கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசனின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆலய நிருவாகிகள் உற்சவத்தோடு தொடர்புடைய திணைக்களத்தலைவர்கள் மொனராகல அரசஅதிபரின் பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் உற்சவத்தின்போது நடைமுறைப்படுத்தவேண்ய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமெனத் தெரியவருகிறது.
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கான யாத்திரீகர்கள்சட்டத்தின்கீழான வசதிகளை வழங்குதல் தொடர்பாகவும்  கலந்துரையாடப்படுவதோடு காட்டுப்பாதை திறப்பில் இறுதித்தீர்மானமும் எடுக்கப்படும்

No comments:

Post a Comment