சுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதின நிகழ்வுகள். - Karaitivu.org

Breaking

Friday, April 19, 2019

சுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதின நிகழ்வுகள்.


சுவாமி விபுலாநந்தரின் 95வது துறவறதினம் இன்று!

இன்று 19ஆம் திகதி சித்ரா பௌர்ணமி தினமாகும். இன்றையநாளைப்போன்றொரு
தினத்தில்தான் உலகின்முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி
விபுலாநந்த அடிகளர் துறவறம் பூண்ட நாளாகும்.

அதனை சிறப்பிக்கும் முகமாக சுவாமி விபுலானந்தரின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு காவி அஸ்திரம் மற்றும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இன் நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் மற்றும் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment