நடராஜானந்தா மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆண்டுக்கான 108 ஆவது" புதுமைப்பெண்" என்ற தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு காரைதீவு - 02 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் சங்கத்தின் தலைவி திருமதி.சி.தவம் அவர்களின் தலைமையில் இன்று (3) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டார்கள். சிறப்பு அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோகுலராஜன் அவர்களும், சமூர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எஸ். சதிசேகரன் அவர்களும், மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள், சங்க அங்கத்தவர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது விரைவில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையேற்கவுள்ள மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு. வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் அத்துடன் சங்க அங்கத்தவர்களினால் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 3 ஏப்ரல், 2019
 
சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2019
Tags
# Karaitivu
 
      
Share This 
 
About Jenigshan
Karaitivu
Labels:
Karaitivu
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*
 













 
 
 
 
 
 இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்