நாளை காரைதீவில் கிழக்கு கரையோரச்சமர் ஆரம்பம்! பிரதமஅதிதியாக கோடீஸ்வரன் எம்.பி. பங்கேற்பு - Karaitivu.org

Breaking

Monday, March 11, 2019

நாளை காரைதீவில் கிழக்கு கரையோரச்சமர் ஆரம்பம்! பிரதமஅதிதியாக கோடீஸ்வரன் எம்.பி. பங்கேற்பு

நாளை காரைதீவில் கிழக்கு கரையோரச்சமர் ஆரம்பம்!
பிரதமஅதிதியாக  கோடீஸ்வரன் எம்.பி. பங்கேற்பு!

'கிழக்கு கரையோரச்சமர்' என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH) நாளை 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காரைதீவில் ஆரம்பமாகிறது.

நாளை காலை 9மணிக்கு காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் இக்கன்னிப்போட்டியை பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவிருக்கிறார்.

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே வரலாற்றில் முதற்றடவையாக இப்போட்டி நடைபெறவுள்ளது.

இருபாடசாலைகளின் அதிபர்களான தி.வித்யாராஜன் வ.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் அங்குரார்ப்பணவைபவம் நடைபெறவிருக்கிறது.

கௌரவஅதிதிகளாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் பிரதேசசெயலாளர்களான ஜே.அதிசயராஜ் வி.ஜெகதீசன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் ரெலிகொம் நிறுவனத்தின் வட-கிழக்குப்பிராந்திய பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எ.கிருபாகரன் பிரதிப்பொதுமுகாமையாளர் பொறியியலாளர் வை.கோபிநாத் சந்தைப்படுத்தல் பிரதிப்பொதுமுகாமையாளர் பொறியியலாளர் அனுருத்தசூரியாராய்ச்சி பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் நியுட்டன் நிசாந்த் சந்தைப்படுத்தல் பொறியிலாளர் டி.எஸ்.பி.மாபா ஆகியோர் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றனர்.

மேலும் .சிறப்பு அதிதிகளாக கல்முனை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.கே.ஜெயநித்தி  சம்மாந்துறை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி எம்.கே. இப்னுஅசார் கல்முனை வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் உதவிக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.மொகமட் சாஜித் சம்மாந்துறை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரிஆலோசகர் ஜ.எல்.எம்.இப்றாகிம்  பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர்களான  ஜே.பத்தலோமியஸ் எம்.சிதம்பரநாதன் பழையமாணவர்சங்கச்செயலாளர்களான டாக்டர்.என்.ரமேஸ் வி.விஜயசாந்தன் கிழக்குமாகாண கிரிக்கட் ஒன்றிய செயலாளர் சிதத்லியனாராய்ச்சி ஆகியோர் கலந்துகொள்வார்கள்.


எம்.சஞ்சீவ் தலைமையிலான விபுலாநந்தா அணியும்  ஜி.வினோஜித்  தலைமையிலான உவெஸ்லி அணியும் இந்த கன்னிச்சமரில் மோதவுள்ளன.


No comments:

Post a Comment