விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் - Karaitivu.org

Breaking

Wednesday, March 13, 2019

விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல்

சபரகமுவ பல்கலைக் கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ ,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் 21.03 .2019 அன்று  நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த(Bsc special degree sports science management and physical education) பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 17.03.2019 (ஞாயிற்றுக் கிழமை )  காலை 8.30 மணிக்கு மட்/பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையில் நடைபெற இருக்கின்றது.

சபரகமுவ,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம்,உடற்தொழில் பட்டப்படிப்பியல்(Apititude exam) நுழைவு பரீட்சைக்கு தோற்ற இருக்கும்  கிழக்கு மாகாண மாணவர்களை கலந்து பயன்பெறுமாறு சபரகமுவ பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் பயண,தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களும் அன்றைய தினம் நடைபெற இருக்கின்றது.
 
Note : ஏற்கனவே அந்த பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்கள்...
 பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இந்த செய்தியை share  பண்ணவும்

No comments:

Post a Comment