காரைதீவிலிருந்து முதலாவதாக SLAS க்கு தெரிவாகிய பெண். - Karaitivu.org

Breaking

Friday, February 15, 2019

காரைதீவிலிருந்து முதலாவதாக SLAS க்கு தெரிவாகிய பெண்.

காரைதீவிலிருந்து முதலாவதாக தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்த தமிழ் பெண்
காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இவர் தற்போது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இரசாயனவியல் பாடம் கற்பித்து வருகிறார்.
கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியான குணாளினி ஓய்வுநிலை தொழினுட்ப உத்தியோகத்தர் பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் புதல்வியாவார். 
காரைதீவு ஓர்க் இணையதளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம். 

No comments:

Post a Comment