கிராம சக்தி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு... - Karaitivu.org

Breaking

Sunday, February 24, 2019

கிராம சக்தி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு...

கிராம சக்தி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வாக காரைதீவு - 08, 09 கிராம சேவகர் பிரிவு கிராம சக்தி மக்கள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கலை கலாசார விளையாட்டு விழா இன்று (24) பாலையடிபிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகானந்தராஜா அவர்களும்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  ஜனாப். எம்.அச்சு முஹம்மட் அவர்களும், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வி.கோகுலராஜன் அவர்களும் மற்றும் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்குபற்றலுடன் நடைபெற்றதுடன் இந்நிகழ்வு பிரிவுக்குரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.விநாயகமூர்த்தி, திருமதி. கிருஷ்ணமாலினி ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களுக்கான கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment