விபுலானந்தா இல்ல விளையாட்டுப்போட்டியில் குறிஞ்சி இல்லம் வெற்றிவாகை… - Karaitivu.org

Breaking

Saturday, February 16, 2019

விபுலானந்தா இல்ல விளையாட்டுப்போட்டியில் குறிஞ்சி இல்லம் வெற்றிவாகை…

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த தை மாதம் 17 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
நேற்று (15/02/2019) வெள்ளிக்கிழமை கல்லூரியின் கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றது.
இந் நிகழ்வுகளை அதிபர் திரு.வித்தியராஜன் தலைமை தாங்கினார் , மேலும் பிரதம அதிதி திரு.M.S.அபூல் ஜலீல் (வலய கல்வி பணிப்பாளர்,கல்முனை)
K.ஜெயசிறில் (பிரதேச சபை தவிசாளர் ,காரைதீவு)திரு.V.ஜெகதீசன் (பிரதேச செயலாளர்,காரைதீவு) திரு.M.I.அசார்( O.I.C சம்மாந்துறை) திரு.A.விமலராஜா (Finacial Advisor) திரு.S.புவனேந்திரன் (DDE-Admin) Mr.PMY.அரவாத் (DDE- Planning) Eng.G.அருண் (Eng.School Works) திரு.S.L.அப்துல் ரஹீம்(DDE-Develop)திருமதி.ஜிஹானா அலிவ்(DDE-Management) திரு.K.றிஷ்வி யாஷர்(Accountant) திரு.U.l.M.ஷாஜித்(ADE phy.edu) திரு.V.T.சகாதேவராஜா(ADE-sammanthurai) RTN.M.சிதம்பரநாதன்(SDEC-secretary) திரு.A.விவேகானந்தராஜா(President traks) திரு.V.புவனேந்திரராஜா (Ex.Com-traks)திரு.I.L.M.இப்ராஹிம்(ISA-phy.edu) திரு.T.கிறிஷ்ணிவாசன் (PSI-Co-ordinator) திரு.V.விஜயசாந்தன்(PPA-secretary) திரு.C.நந்தகுமார்(Secretary traks) மேலும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் நிகழ்வுகளாக 100m ,400m, பழைய மாணவர்களின் ஓட்ட நிகழ்ச்சிகள், அஞ்சல் ஓட்டங்கள்,றில் உடற்பயிற்சியுடன் இல்லங்களுக்கான அணிநடை போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந் நிகழ்வுகளில் திரு.P.கேதீஸ் தலைமையிலான குறிஞ்சி இல்லமும், திரு.T.பிரதீஸ் தலைமையிலான முல்லை இல்லமும், திரு.P.மோகனதாஸ் தலைமையிலான மருதம் இல்லமும்போட்டி போட்டது.
சாதனைகளுக்கு பாத்திரமாகி 612 புள்ளிகளோடு வெற்றியை தனதாக்கியது குறிஞ்சி இல்லம். மேலும் திரு.P.கேதீஸ் தலைமையில் கடந்த வருடம் மருதம் இல்லம் வெற்றி பெற்றது, அதே போன்று இவர் தலைமையில் இரண்டாவது தடவையாக குறிஞ்சி இல்லம் வெற்றியை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
475 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் மருதம் இல்லமும், முல்லை இல்லம் 376 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது.
இதன் போது பெருவிளையாட்டு, மெய்வல்லுனர் விளையாட்டுகளில் வெற்றி பெற்றோர்களுக்கும் , விளையாட்டுக்களின் சாதனையாளர்களுக்கும் ,வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களை வழங்குவதை கீழே படத்தில் காணலாம்.
No comments:

Post a Comment