14வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. - Karaitivu.org

Breaking

Wednesday, December 26, 2018

14வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச கரையோரப் பிரதேசங்களில் இன்று 14வது சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் அம்பாறை மாவட்டத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் அவர்களின் நினைவாக இன்று காரைதீவில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபிக்கு முன்பாக காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மணிமாறன் அதிபரின் தலைமையில் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆரம்ப நிகழ்வாக இந்துசமய கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது இதனை தொடர்ந்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூறப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும், காரைதீவு பிரதேச சபை கெளரவ தவிசாளர் திரு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர்கள், இந்து சமய விருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment