காரைதீவு சண்முகா மகா வித்தியாலய ஆசிரியருக்கு பிரதிபா விருது. - Karaitivu.org

Breaking

Wednesday, October 10, 2018

காரைதீவு சண்முகா மகா வித்தியாலய ஆசிரியருக்கு பிரதிபா விருது.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அதிபர்மற்றும் ஆசிரியர்களுக்கான குரு பிரதிபா விருது வழங்கல் நிகழ்வில் காரைதீவு சண்முகா மகா வித்தியாலய சங்கீதபாட ஆசிரியை                                திருமதி.புவனேஸ்வரி ஜெயகணேஸ் என்பவரே இவ் விருதினை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
தேசத்தின் சிறார்களை எதிர்கால சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுக்கத்தேவையான நிபுணத்துவமிக்க பரிபூரண பிரஜைகளாக சமூகத்திடம் கையளிக்க ஆசிரியராக மேற்கொண்ட சேவையினை கௌரவிக்கும் வகையில்  இவ்விருது வழங்கப்பட்டது. No comments:

Post a Comment