எரிபொருள் விலைச் அதிகரிப்பு. இன்று நள்ளிரவு முதல் அமுல். - Karaitivu.org

Breaking

Wednesday, October 10, 2018

எரிபொருள் விலைச் அதிகரிப்பு. இன்று நள்ளிரவு முதல் அமுல்.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 6 இனாலும், ஒக்டேன் 95 இனது விலை ரூபா 8 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண (Auto) டீசலின் விலையில் மாற்றமில்லை என்பதோடு, இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலையேற்றம் அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய
CPC - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
  • பெற்றோல் Octane 92 - ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும் 
  • சுப்பர் டீசல் - ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஒட்டோ டீசல் - ரூபா 123 (விலையில் மாற்றமில்லை)

No comments:

Post a Comment