நீண்ட வரட்சியின் பின் மழை.. - Karaitivu.org

Breaking

Friday, September 21, 2018

நீண்ட வரட்சியின் பின் மழை..

நீண்ட வரட்சியின் பின்  மழை 
அம்பாறை மாவட்டத்தில் நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர்  இன்று (21) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30மணியளிவில் மழை இடி மின்னலுடன் மழை பொழிகிறது
கல்முனைப்பிராந்தியத்தில் இம் மழை பொழிந்ததையடுத்து மக்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தனர்.
வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய இந்தவேளையில் இம் மழை பொழிந்ததனால் மக்கள் பூரிப்படைந்தனர்.
இதேவேளை வரலாற்றுப்பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மனாலய தீமிப்புவைபவம்   இன்று மாலை நடைபெற ஏற்பாடாகியிருந்தவேளை இம்மழை பொழிந்து பூமியின் வெப்பத்தைத் தணித்துள்ளது.
வெள்ளம் என்று இல்லாவிடினும் பூமியின் வெப்பத்தை பொதுவாக தணித்துள்ள இம்மழை எதிர்வரும் பெரும்போகத்திற்கு உதவுமா என்பது மழை தொடர்வதில்தான் தங்கியுள்ளது

No comments:

Post a Comment