இந்து சமய அறநெறிக் கல்வி கொடிதினம்- 2018
இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம் இன்று காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் இந்து கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ் அவர்களும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ச.நேசராசா, த.மோகனதாஸ் சி.ஜெயராணி, மு.காண்டீபன் இ.மோகன், ஆ.பூபாலரெத்தினம் பிரதேச சபை செயலாளர் சுந்தரகுமாா் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் போது தவிசாளரால் கொடி விற்பனை மற்றும் இவ்வமைப்பில் அங்கத்தவர்களை இணைத்தல் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அவர் உரையாற்றுகையில் இது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதற்காக மக்களால் ஏழு கோடி எண்பது இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறநெறி பாடசாலைகள் வளர்ச்சி பெற பெற்றோா்கள் மாணவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் பிரோத்தியோக வகுப்புக்களுக்கு அனுப்புவதைத் தவிா்த்து அறநெறி வகுப்புக்களுக்கு அனுப்புவதை முக்கியத்துவப்படுத்த வேண்டும். அத்தோடு ஆசிாியர்களும் இதற்கு ஒத்தாசை வழங்க வேண்டும் என்தையும் தெரிவித்தாா்.
Wednesday, June 6, 2018
இந்து சமய அறநெறிக் கல்வி கொடிதினம்- 2018
Subscribe to:
Post Comments (Atom)
Posted by
This news was posted by Karaitivu.org's WebTeam member.
No comments:
Post a Comment