சித்தர் கல்வியகத்தால் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 26 டிசம்பர், 2019

சித்தர் கல்வியகத்தால் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு!

சித்தர் கல்வியக உறவுகளால் சுனாமி நினைவு தினம் இன்று கல்வியக பொறுப்பாசிரியர் திரு.வை.சத்தியமாறன்அவர்களின் தலைமையில் காரைதீவு கலைமகள் சனசமூக நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டதுஇதன்போதுஇறந்த ஆத்மாக்களின் சாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிரார்த்தனை இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் அவர்களும்கௌரவஅதிதிகளாக  ஓய்வு நிலை அதிபர் திரு.வி.கமலநாதன் அவர்களும்ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்த்தாஎந்திரி.இராஜமோகன் அவர்களும்ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலய தலைவர் திரு.சி.நந்தேஸ்வரன்அவர்களும்சிறப்பு அதிதியாக கல்வியக போசகர் திரு.கி.சசிகரபவன் மற்றும் திரு.மயில்வாகனம் சஞ்சீவ் குடும்பஉறவினர்களும் கல்வியக ஆலோசகர் திரு.சி..கதன் மற்றும் கல்வியக ஆசிரியர்கள்மாணவர்களும் கலந்துகொண்டனர்

அதிதிகளால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் கலந்து கொண்ட சித்தர் கல்வியக மாணவர்களுக்குஅதிதிகளால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிகளும் ஒத்தாசைகளும் வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் கல்வியகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
















Post Bottom Ad

Responsive Ads Here

Pages