காரைதீவு றீம் பார்க் முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா... - Karaitivu.org

Breaking

Saturday, December 8, 2018

காரைதீவு றீம் பார்க் முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா...

காரைதீவு றீம் பார்க் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் விடுகை விழாவும் 08.12.2018 ம் திகதி காரைதீவு கலாசார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வு பாடசாலையின் தலைமை ஆசிரியை செல்வி K. செல்வமணி  அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் கலந்துகொண்டதுடன்.

கௌரவ அதிதியாக காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர்  திரு.தி. உமாசங்கரன் அவர்களும் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் MI. றிஸ்னி அவர்களும் சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு விநாயகமூர்த்தி அவர்களும், பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. P. வசந்தராஜா அவர்களும், பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு வ. விஜயதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அவர்களுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments:

Post a Comment