பணிநிறைவு பாராட்டு விழா... - Karaitivu.org

Breaking

Friday, December 7, 2018

பணிநிறைவு பாராட்டு விழா...

பணிநிறைவு பாராட்டு விழாவில்...

கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் கீழுள்ள கல்முனை -01 ஏ பிரிவில் 19 வருடங்கள் கிராம உத்தியோகத்தராக சேவையாற்றியதுடன் அரசசேவையில் 36 வருடங்கள் சேவைபுரிந்த ராகவன்பிள்ளை மித்திரன் அவர்களின் சேவையைப்பாராட்டி கல்முனை-01ஏ கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் சமாதானநீதவான் இ.இராஜரெத்தினம் தலைமையில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு  பிரதேச செயலாளர் க.லவநாதன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் எஸ்.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வசந்தினி யோகேஸ்வரன், கிராம சேவகர் மா.உதயசேகர், மாநகரசபை உறுப்பினர் திருமதி சுமித்திரா ஜெகதீசன் விசேட அதிதியாக அகரம் செ.துஜியந்தன் அகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு வரவேற்புரையினை சமுர்த்தி வங்கி முகாமையாளர் க.இதயராஜ்   நன்றியுரையினை சங்கச்செயலாளர் சமாதானநீதவான் செ.காந்தரூபன் நிகழ்ச்சி தொகுப்பினை கலைஞர் ம.திருக்குமார் ஆகியோர் நிகழ்ததினார்கள்.

சிறப்பு பாடல் ஒன்றினை தொலைக்காட்சி புகழ் பாடகர் பி.கே.சேகர் பாடினார். கிராமசேவகர் மித்திரன் பொன்னாடை போர்த்தி, பாராட்டுப்பத்திரம், பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை தமிழ்ப்பிரிவில் கிராம உத்தியோகத்தராக  இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஒருவருக்கு முதன் முதலில் இப் பிரிவிலுள்ள பொதுமக்களால் நடைபெறும் பணிநிறைவு பாராட்டுவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment