காரைதீவு பிரதேச செயலக மட்ட கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகம் வரலாற்றுச் சாதனை - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

காரைதீவு பிரதேச செயலக மட்ட கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகம் வரலாற்றுச் சாதனை



 


காரைதீவு பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டி காரைதீவு பிரதேச செயலாளர் திரு.எந்திரி.G.அருணன் தலைமையில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 25.04.2026 அன்று இடம்பெற்றது.

 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவ.ஜெகராஜன் அவர்கள் கலந்துகொண்டார். அத்துடன் காரைதீவு, பிரதேச சபை தவிசாளர் கௌரவ.S.பாஸ்கரன், உதவி பிரதேச செயலாளர் திரு.P.பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் திரு.T.கமலநாதன், நிருவாக உத்தியோகத்தர் விபுலாநந்தா மத்திய கல்லூரி அதிபர் திரு.M.சுந்தரராஜன்  மற்றும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது  பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான மெய்வலுனர் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

போட்டி நிகழ்வுகளில் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறு கழகங்கள் பங்குபற்றி  ஜொலிக்கிங்ஸ் (JKSC) விளையாட்டுக் கழகம் 23 தங்கப் பதக்கங்களை பெற்று 10 மேலதிக தங்கப்பதக்கங்களால் முதல் இடத்தை கைப்பற்றிக் கொண்டது.

இரண்டாம் இடத்தை  காரைதீவு விளையாட்டுக் கழகமும் (KSC), மூன்றாம் இடத்தை விவேகானந்தா விளையாட்டுக் கழகமும் (VSC) பெற்றுக் கொண்டனர்.


இறுதியில்
 வெற்றி பெற்ற அணியினருக்கும் வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. சம்பியன் வெற்றிக் கிண்ணத்தினைஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் கி.தனுஷியன் அவர்கள் அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பல்வேறு தேவைகளுடன் இயங்கிவரும் இக்கழகமானது,  ஆரம்பிக்கப்பட்டு 19வருடங்களில்   கழக உறுப்பினர்களின் அர்ப்பணிப்பினாலும் திறமையினாலும் முதல் தடவை காரைதீவு பிரதேச செயலக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.













Post Bottom Ad

Responsive Ads Here

Pages