இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய vaaj junior premier league கூடைப்பந்தாட்ட போட்டியானது 15 மாவட்டங்களின் பங்குபற்றுதலுடன் மாத்தறையில் 9,10,11,12 திகதிகளில் இடம்பெற்று வருகின்றது
இச் சுற்றுப்போட்டி தொடரில் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் காரைதீவு அணியானது குழு A யில் இடம்பிடித்து முதலாவது போட்டியில் வவுனியா மாவட்ட அணியினருடன் மோதி 19:74 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி 2 வது போட்டியில் மாத்தளை மாவட்ட அணியுடன் மோதி 71:25 எனும் புள்ளியினை பெற்று மாத்தளை மாவட்ட அணியினை 46 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி அம்பாறை மாவட்ட அணி கால் அரையிறுதி போட்டிக்கு தெரிவானது.
கால் அரையிறுதியில் நுவரெலியா மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 59:40 எனும் புள்ளி அடிப்படையிலும் அரையிறுதி போட்டியில் மாத்தற மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 58:46 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது
இவ் இறுதி போட்டியானது இன்று 12.06.2025 மாலை 4.00 மணிக்கு மாத்தறை Lebeema உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.