திருக்குளிர்த்திச் சடங்கு காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்! ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 26 மே, 2025

திருக்குளிர்த்திச் சடங்கு காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்! ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!!!

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்த்தி  சடங்கு காலத்தின் பொழுது காரைதட பாதுகாப்பு பலப்படுத்தப்படும் .

என்று திருக்குளிர்த்தி  சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது .

குறித்த சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) ஆலய மண்டபத்தில் தர்மகர்த்தார்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம், சா.கனகசபேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அங்கு காரைதீவு உதவிப் பிரதேசசெயலாளர் எஸ். பார்த்திபன், காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர் எஸ் .ஜெகத், பிரதேச சபை  செயலாளர் அ. சுந்தரகுமார் உள்ளிட்ட தலைமைகள் கலந்து கொண்டனர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு  எதிர்வரும் திங்கட்கிழமை 2ஆம் திகதி கதவுதிறத்தல் கடல்தீர்த்தம் கொணரல் கல்யாணக்கால் நடல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி

தொடர்ந்து 07தினங்கள் சடங்கு இடம்பெற்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவுறும்.

கூட்டத்தில் சுகாதாரம் போக்குவரத்து வீதி  தொண்டர் நடைமுறை பாதுகாப்பு குடிநீர் வசதி உள்ளிட்ட பல துறைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கலந்து கொண்ட பிரமுகர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது.

இறுதியில் அனைவருக்கும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன நோட்டீஸ் வழங்கி வைக்கப்பட்டது.

( வி.ரி. சகாதேவராஜா)










Post Bottom Ad

Responsive Ads Here

Pages