ஒளி விழா....
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களின் 2024ம் ஆண்டிற்குரிய வருடாந்த ஒளி விழா நிகழ்வானது அன்று 22_12_2024 மாலை 3.30 மணியளவில் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை வின்சஸ்லொஸ் அடிகளார், கல்முனை மறைக்கோட்ட குரு முதல்வர் டெறன்ஸ்ராகல் அடிகளார், றிட்சட்சன் அடிகளார், அருட்சகோதரி சிறிய புஸ்பம், பவித்ரா, மற்றும் நாவிதன்வெளி காலாச்சார உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், வீரச்சோலை பாடசாலை அதிபர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
யேசு பாலன் பிறப்பை முன்னிட்டு சிறார்கள் வண்ண வண்ண ஆடையணிந்து விதம் விதமான நிகழ்வுகளை அரங்கேற்றியதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
மேலும் விவிலிய வினா விடை போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற 35 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், நிகழ்வின் இறுதியில் நத்தார் தாத்தா வருகை தந்து மக்களை அகக்கழிப்பில் ஆழ்த்தினர்.... பொது மக்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
செய்தியம் படங்களும்ம் -க.டினேஸ்